search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேஷன் பொருட்கள்"

    குடிநீர் இணைப்பு, சாதிச்சான்றிதழ் உள்பட வீடுதேடி வரும் அத்தியாவசிய சேவைகள் திட்டம் செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #AAPgovt #Delhidoorstep
    புதுடெல்லி:

    ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் நடைபெறும் ஊழல்களை தடுக்கும் வகையில் டெல்லியில் வீடுதேடி சென்று பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அறிவித்தார். அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், டெல்லி மக்களுக்கு குடிநீர் இணைப்பு, சாதிச்சான்றிதழ், திருமணப் பதிவு, ஓட்டுனர் உரிமைக்கான விண்னப்பம் உள்பட வீடுதேடி வரும் அத்தியாவசிய சேவைகள் திட்டம் செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கப்படும் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆட்சி முறையில் ஒரு புரட்சியாகவும், ஊழலுக்கு வீழ்ச்சியாகவும் உலகிலேயே முதன்முறையாக வீடுதேடி வரும் சேவைகள் என்னும் மக்களுக்கு மிகவும் வசதியான திட்டம் செப்டம்பர் பத்தாம் தேதி தொடங்குகிறது’ என குறிப்பிட்டுள்ளார். #AAPgovt #Delhidoorstep 
    தலைநகர் டெல்லியில் மக்களின் இல்லங்களை தேடி சென்று ரேஷன் பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தை விரைவுப்படுத்துமாறு முதல் மந்திரி கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். #Kejriwalapproval #rationsdoorstepdelivery
    புதுடெல்லி:

    டெல்லி அரசில் அதிக அதிகாரம் படைத்தவர் யார்? என்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் சமீபத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவர் என்ற முறையில் முதல் மந்திரி தலைமையிலான மந்திரிசபைக்கு தான் அதிக அதிகாரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    மந்திரிசபையால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தடைக்கல்லாகவும், இடையூறாகவும் கவர்னர் இயங்க முடியாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, கவர்னரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மோதல்போக்கை கடைபிடித்து வந்த அரசு உயரதிகாரிகள் தற்போது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி, அவருடன் இணைந்தும் இணக்கமாகவும் பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லி அரசின் செலவினங்களுக்கான நிதிக்குழு கூட்டம் இன்று துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தின்போது டெல்லியில் கட்டப்பட்டு வரும் சிக்னச்சர் பிரிட்ஜ் என்னும் மேம்பாலத்தின் இறுதிகட்ட பணிகளை முடிக்கவும், டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் மேலும் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் தங்கும் வகையில் 3 புதிய விடுதிகளை கட்டவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ‘டெல்லியில் மக்களின் இல்லங்களை தேடி சென்று ரேஷன் பொருட்களை வினியோகிக்கும் திட்டத்துக்கு எதிரான தடைக்கற்களை தகர்த்தெறிந்து, அந்த திட்டத்தை விரைவுப்படுத்துமாறு உணவுப்பொருள் மற்றும் பொது வினியோகத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இந்த திட்டத்தை அமல்படுத்தும் பணிகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்த அன்றாட நடவடிக்கைகள் பற்றி தனக்கு தெரிவிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தியதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #Kejriwalapproval  #rationsdoorstepdelivery
    டெல்லியில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் திட்டத்தை அமல்படுத்த முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். #AravindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லியில் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தை அம்மாநில அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்து இருந்தது. அதன்படி, வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை அமல்படுத்த டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உத்தரவிட்டுள்ளார்.

    இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு டெல்லி உணவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் அதிகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. #AravindKejriwal
    அரிசி மற்றும் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருச்சி -சிதம்பரம் சாலையில் உள்ள ரேஷன் கடையில் பல்வேறு வார்டுகளில் உள்ள  பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த  மூன்று மாத காலமாக அரிசி மற்றும் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ரேஷன் கடை முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.   

    சம்பவ மறிந்து வந்த தாசில்தார் குமரையா, வட்ட வழங்கல் அலுவலர் சம்பத், வருவாய் ஆய்வாளர் சிவசக்தி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு அரிசி வழங்குவதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை  கைவிட்டுகலைந்து சென்றனர். மேலும் உடனடியாக அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    ×